நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! |
பிரபல ஹிந்தி பாப் பாடகியான த்வானி பனுஷாலி நடிகையாக மாறி நடித்துள்ள படம் ‛கஹன் சுரு கஹன் கதம்'. காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. அஷிம் குலாதி நாயகனாக நடிக்க, சவுரவ் தாஸ்குப்தா இயக்கி உள்ளார். செப்., 20ல் திரைக்கு வரும் இப்படம் தொடர்பாக த்வானி பனுஷாலி அளித்த பேட்டி :
இந்த படத்திற்காக எப்படி உங்களை தயார்படுத்தினீர்கள்?
படத்தில் எனது கேரக்டர் பெயர் மீரா. அந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்துள்ளேன். குறிப்பாக நிறைய நடிப்பு பயிற்சிகளை மேற்கொண்டேன். படத்தில் என் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் திருமணம் பிடிக்காததால் திருமணநாளன்று யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விடுவது மாதிரியான வேடம். எனக்கு தொடர்பில்லாத ஒரு வேடம் என்பதால் சற்று கடினமாக இருந்தது. இருந்தாலும் நிறைய பயிற்சி எடுத்து நடித்தேன்.
நடிக்கும் ஆசை எப்போது வந்தது?
17 வயதில் இருந்து நடிக்க ஆசைப்பட்டேன், அதேசமயம் நடிப்பு எளிதானது அல்ல என்பது தெரியும். ஆரம்பத்தில் நிறைய மியூசிக் ஆல்பத்தில் நடித்து என்னை தயார்படுத்திக் கொண்டேன். எந்த ஒரு வேலையும் உடனே நடக்காது. அதற்கான சரியான நேரம் வர வேண்டும். எனக்கு நடிப்பதற்கு இது தான் சரியான நேரம்.
உங்கள் பாலிவுட் அறிமுகத்தை வீட்டில் எப்படி பார்த்தார்கள்?
வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சி தான். குறிப்பாக என் அப்பாவுக்கு அதிக சந்தோஷம். காரணம் என் தந்தையை தான் எனது மிகப்பெரிய விமர்சகராக நான் கருதுகிறேன். காரணம் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதை முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார். எனது நடிப்பு ஆசையை பொருத்தமட்டில் அவருக்கு என் வேலை பிடித்துள்ளது. பெருமையாகவும் கருதுகிறார்.
நீங்கள் பணிபுரிய விரும்பும் நடிகர்கள், இயக்குனர்கள் யார்?
இந்த நடிகர்கள் உடன் நடிக்கணும் என எந்த பட்டியலும் இல்லை. ஆனால் விக்கி கவுசல் உடன் நடிக்கும் ஆசை உள்ளது. காரணம் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். இயக்குனர்களில் லக்ஷ்மன் உதேகர், இம்தியாஸ் அலி, சுஜோய் கோஷ் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருடன் பணியாற்ற ஆசை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.