தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

ஜெய்பீம் படத்தை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி இருக்கிறார் ஞானவேல். அக்டோபர் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில், நேற்று இப்படத்தின் மனசிலாயோ என்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ஜெய்பீம் படத்தைப் போலவே வேட்டையன் படத்தையும் உண்மை கதை அடிப்படையில் இயக்கி உள்ள ஞானவேல், இப்படம் தமிழகத்தில் நடந்த சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருப்பதாக கூறுகிறார்.
இப்படத்திற்கு பிறகு மறைந்த சரவண பவன் ராஜகோபால் மற்றும் ஜீவ ஜோதி இடையே நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் தனது அடுத்த படத்தை இயக்க போகிறாராம். குறிப்பாக, அவர்களுக்கிடையே நடந்த பிரச்னை மற்றும் ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கப் போகிறாராம் ஞானவேல். ஹிந்தியில் உருவாகும் இந்த படத்திற்கு தோசா கிங் என்று அவர் தலைப்பு வைத்திருக்கிறார் .