டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' சுருக்கமாக ‛தி கோட்' எனும் பிரமாண்டமான படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை செப்டம்பர் 5ம் தேதி அன்று வெளியாகிறது. இதன் விளம்பர பணிகளும் மற்றும் டிக்கெட் முன் பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதில் ஒரு காட்சியில் ஸ்டேடியத்தில் நடைபெறும் கிரிக்கெட் காட்சிகள் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிரிக்கெட் கமெண்டரி கொடுக்கும் காட்சியில் முன்னாள் சி.எஸ்.கே மற்றும் இந்திய அணியின் வீரர் பத்ரிநாத் நடித்துள்ளார். இதற்கான டப்பிங் பணிகளும் முடிவடைந்ததாக இப்போது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பத்ரிநாத்.