'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

பாக்கியலெட்சுமி தொடரில் தாத்தா ராமமூர்த்தியாக ரோசரி நடித்து வருகிறார். தற்போது இவரது கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது. ஏன் ராமமூர்த்தியை கொன்றுவிட்டார்கள் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோசரியே பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் தான். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரமும் முடிவு பெறுகிறது. அதனால் ஓகே என்று சொல்லிவிட்டேன். இறுதிசடங்கு காட்சிக்காக இறுதிசடங்கை ரியலா பண்ணனும் சொன்னாங்க. ராமமூர்த்திக்கு இறுதிசடங்கு பண்றாங்கன்னு எடுத்துக்கிட்டேன். அது நடிப்பு அவ்ளோ தான்' என்று கூறியுள்ளார்.




