சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில், விஜய் நாயகனாக நடித்துள்ள 'தி கோட்' படத்திற்கான சென்சார் முடிந்துவிட்டது. படத்திற்கு 'யு-ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்களாம். மூன்று மணி நேரத்திற்கு ஒரு நிமிடம்தான் குறைவு.
சமீப காலங்களில் நீளமான படங்களை ரசிகர்கள் ரசிக்கத் தயங்குகிறார்கள். படம் நீளம் என்று கமெண்ட் வந்த பின் அதில் சில காட்சிகளை நீக்குவதும் நடக்கிறது. சமீபத்தில் கூட 'இந்தியன் 2' படத்திற்கான நீளம் முதலில் 3 மணி நேரமே இருந்தது. பின்னர் 12 நிமிடக் காட்சிகளைக் குறைத்தார்கள்.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லியோ' படத்தின் நீளம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள், 'வாரிசு' படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள், 'பீஸ்ட்' படத்தின் நீளம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள், 'மாஸ்டர்' படத்தின் நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள், 'பிகில்' படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள், 'சர்கார்' படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள், 'மெர்சல்' படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்களாக இருந்துள்ளன. இது கடந்த சில வருடங்களில் விஜய் நடித்து வெளிவந்த படங்களின் நேரம்.
அவ்வளவு நேரம் இருந்தாலும் அந்தப் படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. எனவே தான் 'தி கோட்' படத்தின் நீளத்தையும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வைத்திருப்பார்கள். விஜய்யை அதிக நேரம் திரையில் பார்ப்பதும் அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். 'தி கோட்' எப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தரப் போகிறது என்பது இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.