அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த டியர் படத்தை அடுத்து மோகன் தாஸ், கருப்பர் நகரம் போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மலையாளம் கன்னடத்திலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் அடுத்த படியாக தெலுங்கில் புதிய படங்களை கைப்பற்றுவதில் அவர் தீவிரமடைந்திருக்கிறார். இப்படியான நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில், எந்த ஹீரோவுடன் டின்னருக்கு செல்ல ஆசை என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, விஜய்யுடன் டின்னருக்கு செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்ன இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.