ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியது. ஏற்கனவே இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இவர்கள் அல்லாமல் இப்படத்தில் நடிக்க வைக்க மற்ற மொழிகளில் உள்ள சில முக்கிய நடிகர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




