அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ' எல்.ஐ.சி ' . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதலில் ஒளிப்பதிவாளர் ஆக ரவி வர்மா பணியாற்றினார். பின்னர் ஒரு சில காரணங்களால் விலகினார். இதையடுத்து ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இணைந்தார். சமீபத்தில் இவரும் இப்படத்தை விட்டு ஒரு சில காரணங்களால் விலகியதால் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் இப்போது ஒளிப்பதிவாளர் ஆக சத்யன் சூரியன் இணைந்துள்ளாராம். இவர் கைதி, மாஸ்டர், தசரா போன்ற படங்களில் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.