நடிகை சமந்தா தனது இணைய பக்கத்தில் ஹைட்ரஜன் பெராக்ஸைடை சுவாசித்தால் சில பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதனால் தேவை இல்லாமல் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். இதற்கு டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதோடு ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைசரில் சுவாசிப்பது ஆபத்தானது என்று சமந்தாவுக்கு ஒரு கண்டன பதிவு வெளியிட்டதோடு, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து சமந்தா அதற்கு ஒரு விளக்கம் அளித்தார். அதில், அவர் ஒரு டாக்டர் என்பதால் மருத்துவம் சம்பந்தமான விஷயங்களை தெரிந்திருப்பார். என்றாலும் என்னைப் பற்றி அவர் பேசிய வார்த்தைகள் கடுமையாக உள்ளது. என்னை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நான் ஒரு பிரபலமாக இருப்பதால் இது போன்ற விஷயங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் என்னை அவர் விமர்சிப்பதற்கு பதிலாக எனது மருத்துவரிடம் நேருக்கு நேர் உரையாற்றுவது சரியாக இருக்கும் என்று ஒரு பதிவு போட்டிருந்தார் சமந்தா.
இந்த நிலையில் தற்போது அந்த டாக்டர் சமந்தாவுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மருத்துவம் குறித்த அறிவில்லாதவர் என்று சொல்லி சமந்தாவை காயப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. அவர் தவறான நோக்கத்துடன் இதை செய்யவில்லை என்றும் எனக்கு தெரியும். ஆனால் சமந்தா போன்றவர்களை கோடிக்கணக்கானோர் பாலோ செய்து வருவதால் ஆபத்து உள்ளது என்பதால் அதை தடுக்கவே நான் அப்படி பேசினேன். அதற்காக சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் இந்த தவறை அவர் இனிமேலும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அந்த டாக்டர் தெரிவித்துள்ளார்.