ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ள 'பாட்டல் ராதா' படத்தை தினகரன் சிவலிங்கம் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
'நானா குடிகாரன்?' என்ற பாடலுடன் தொடங்கும் இந்த டீசரில் ஒரு குடிகாரனின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்னொரு தடவை குடித்து விட்டு வந்தால் தாலியை கழட்டி எரிந்துவிட்டு குழந்தைகளுடன் போய்க் கொண்டே இருப்பேன் என்று அவரது மனைவி சொல்வது, போலீஸ் அதிகாரி, எதுக்குடா குடிக்கிறே என்று கேட்கும் போது, ''நான் குடிப்பதினால் எங்கள் குடும்பமே நாசமா போகுது. அதை நெனைச்சி கவலைப்பட்டுதான் குடிக்கிறேன்'' என்று கூறும் குரு சோமசுந்தரம், ''நான் சம்பாதித்து என் காசுல குடிக்கிறேன். யாரும் என்ன குடிக்க கூடாதுன்னு சொல்ல ரைட்ஸ் கிடையாது. ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு அப்புறம் குடிக்கிறவனை தப்பு சொன்னா என்ன அர்த்தம்?'' என்று தமிழக அரசை அட்டாக் செய்யும் வசனமும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. நடிகர்கள் சிம்பு, ஆர்யா ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டுள்ளனர்.