கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' |
லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல ஜவுளிக் கடை அதிபர் அருள் சரவணன். அதையடுத்து தனக்கு பொருத்தமான கதை தேடலில் ஈடுபட்டிருந்த அவர், பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில், துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் இயக்கத்தில் அடுத்து நடிக்க போகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் துரை செந்தில் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் லெஜண்ட் சரவணன். அதோடு படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் உள்ளிட்ட பல படங்களை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.