இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
யு-டியூப் வீடியோ தளம் 2005ம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று உலகம் முழுவதும் பல கோடி மக்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு வீடியோ தளமாக உயர்ந்து நிற்கிறது.
யு டியுப் தளத்தில் எண்ணற்ற தமிழ்ப் பாடல்கள், திரைப்படங்கள், காட்சிகள், டிரைலர்கள், டீசர்கள், பல தனி நபர் சேனல்கள் என தமிழ் சினிமா சார்ந்து ஆயிரக்கணக்கான சேனல்களில் பல லட்சம் வீடியோ பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
பழைய படங்கள் பலவும், பாடல்கள் பலவும் அதில் இடம் பெற்றுள்ளது. அவற்றிற்கென்று தனிப்பட்ட வரவேற்பு அதிகம் இருந்தாலும் அவை தற்போதைய படங்கள், பாடல்கள் போல பார்வைகளைப் பெறுவதில்லை.
இப்போது 80களில் வெளிவந்த ஒரு சினிமா பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு பழைய பாடல் இத்தகைய சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை.
ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலர் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளிவந்த படம் 'படிக்காதவன்'. அப்படத்தில் வைரமுத்து எழுதி யேசுதாஸ் பாடிய 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்' பாடல்தான் அந்த 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.
அப்பாடல் பல யு டியூப் சேனல்களில் பதிவேற்றப்பட்டிருந்தாலும் தமிழ் சினிமா என்ற சேனலில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.