நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! |

அருவி, வாழ், டாடா போன்ற படங்களில் கவனம் பெற்றவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தனியார் டிவியில் ஒளிபரப்பான கமல் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இது வலைதளங்களில் டிரெண்ட்டாகி, அவருக்கான ஆதரவு பெருகியது.
இந்நிலையில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக மணப்பெண் உடன் இருக்கும் போட்டோவை வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பிரதீப். ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விபரத்தை வெளியிடவில்லை. இது காதல் திருமணம் என கூறப்படுகிறது. விரைவில் மணப்பெண் பெயரையும், திருமண தேதியையும் பிரதீப் வெளியிடுவார் என தெரிகிறது.




