ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? |
பக்தி இசையில் புகழ்பெற்று விளங்கியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த இவர்கள் சூலமங்கலம் கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர். இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பாடி இருக்கிறார்கள்.
இவர்களில் ராஜலட்சுமி 1992ம் ஆண்டு தனது 51வது வயதில் இறந்து விட்டார். ஜெயலட்சுமி 2017ம் ஆண்டு தனது 80வது வயதில் காலமானார். இன்று ஜெயலட்சுமியின் 90வது பிறந்தநாள். சூலமங்கலம் சகோதரிகள் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை, குறிப்பாக முருகன் பாடல்களை பாடி உள்ளனர். ஏராளமான திரைப்பட பாடல்களையும் பாடி உள்ளனர். சில படங்களில் அவர்களின் கச்சேரி காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஆனால் சூலமங்கலம் சகோதரிகள் ஒரு சில திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்கள் என்பது அதிகம் அறியப்படாத ஒன்று. வி.டி.அரசு இயக்கிய தரிசனம், பிள்ளையார் போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.