நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இந்திய கிரிக்கெட் அணி 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற தினம் இன்று. 1983க்குப் பிறகு இரண்டாவது முறையாக அக்கோப்பையை வென்ற இந்திய அணியில் யுவராஜ் சிங்கும் ஒருவர்.
இந்திய அணிக்காக 304 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 59 டி20 போட்டிகளிலும், 40 டெஸ்ட் மேட்ச்களிலும் விளையாடிய ஆல்ரவுண்டர். அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போனவர். இடையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து அசத்தியவர்.
தன்னுடைய பயோபிக் திரைப்படம் பற்றிய அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். “என்னுடைய பயோபிக்கை நானே நடித்து, இயக்கி, தயாரித்து, எழுத முடிவு செய்துள்ளேன். என்னை வாழ்த்துங்கள். அடுத்த சில வருடங்களில் பெரிய திரையில் அதன் முடிவை நீங்கள் பார்ப்பீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'எம்எஸ் தோனி' பயோபிக் படத்திற்குப் பிறகு சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயோபிக் படம் எதுவும் வரவில்லை. யுவராஜ் சிங்கின் பயோபிக் பற்றி கடந்த சில வருடங்களாகவே சில தகவல்கள் வெளிவந்தன. முன்னணி பாலிவுட் நடிகர்கள் தயாரித்து, நடிக்க விருப்பப்பட்டார்கள். ஆனால், இப்போது யுவராஜே அதைச் செய்ய முடிவு செய்துள்ளார்.
இருப்பினும் ஏப்ரல் 1ம் தேதி அவர் இது பற்றி பதிவிட்டுள்ளதால் இது உண்மையா அல்லது முட்டாள்கள் தினத்திற்கான ஒரு பதிவா என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளார்கள்.