ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். நேற்று இந்த படத்திற்கு 'இளையராஜா' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டனர். படத்தின் அறிமுக விழாவிலும் கமல், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தனது வாழ்க்கை படம் பற்றி இளையராஜா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "ஆரம்பத்தில், இது எனது தனிப்பட்ட பயணமாக இருந்தது. ஆனால், இப்போது அது உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இசை ஆர்வலர்களின் இதயங்களை தொடும் கதையாக மாறுகிறது. இது வெற்றி பெற மொத்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.