சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியான படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'.
இப்படத்திற்கு உலகம் முழுவதிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் முதன் முதலில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்தது. அதன்பின் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை கடந்தய முதல் மலையாளப் படம் என்ற சாதனையை புரிந்தது.
தற்போது உலக அளவில் ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் ரூ.175 கோடி வசூலுடன் ‛2018' படமும், மூன்றாவது இடத்தில் ரூ.135 கோடி வசூலுடன் மோகன்லால் நடித்த ‛புலிமுருகன்' படமும், 4வது இடத்தில் ரூ.125 கோடி வசூலுடன் ‛லூசிபர்' படமும் உள்ளன.