பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

விஜய் டிவியில் நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெங்கடேஷ் பட் விலகிக் கொண்டதை அடுத்து குக் வித் கோமாளி சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் தாமுவுடன் இணைந்து புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெறுகிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்தவர். அதோடு கேட்டரிங் தொழிலும் நடத்தி வருகிறார். திரையுலகில் நடைபெறும் பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இவரது கேட்டரிங்கில் இருந்து சென்றுதான் சமையல் செய்து கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி சீசன்- 5 நிகழ்ச்சியில் நடுவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.