கிளாசிக் படங்களை ரீமேக் செய்யக் கூடாது - ஜான்வி கபூர் | படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் இருக்கிறது : பாக்யராஜ் | அசோக் செல்வன் மீது தயாரிப்பாளர் காட்டம் | பாரிஸ் ஒலிம்பிக்கில் குடும்பத்தினருடன் நடிகர் சிரஞ்சீவி | தமிழ் சினிமா உதவி இயக்குனர்களை புறக்கணிக்கும் மம்முட்டி? | சவால் பிடித்திருக்கிறது : அஞ்சலி நன்றி | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்த “மலைக்கள்ளன்” : அடடா இத்தனை சுவாரஸ்யமா...! | என் தவறுக்கு வருந்துகிறேன் : சுதா கொங்கரா | தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் கேரளாவையும் தாண்டி தமிழ்நாட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இங்கே தமிழ் படங்களை காட்டிலும் தியேட்டர்களில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. படம் பார்த்த பிரபலங்கள் அனைவருமே இந்த படத்தை மனம் விட்டு பாராட்டி வருகின்றனர். குறிப்பாக எப்போதுமே தென்னிந்திய படங்களை அதிலும் தமிழ் மற்றும் மலையாள படங்களை ரசித்து சிலாகித்து பாராட்டி வரும் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தை பார்த்துவிட்டு பிரமிப்பு விலகாமல் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “சிம்பிளான அதே சமயம் அசாதாரணமான ஒரு சினிமா படைப்பு. இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் மேக்கிங்கை விட ரொம்பவே சிறப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு தன்னம்பிக்கை. அந்த அளவிற்கு சாத்தியமில்லாத கதை சொல்லும் முறை.. இந்த ஐடியாவை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி எப்படி விற்க முடிந்தது என நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். ஹிந்தியில் இது போன்ற ஐடியாக்களை ரீமேக்கில் மட்டும் தான் செய்கிறார்கள். உண்மையிலேயே புத்திசாலித்தனமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து வரும் மலையாள படங்களின் பின்னால் வெகு தொலைவில் ஹிந்தி சினிமா இருக்கிறது” என்று கூறியுள்ளார்.