நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! |
டாடா படத்தின் வெற்றிக்கு பின் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்டார்' . அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கைலாசம் கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற ஏப்ரல் 12ந் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு இந்த ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.