என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்களுக்குப் பிறகு அதிகமாக சண்டையிட்டுக் கொள்பவர்கள் ரஜினி, கமல் ரசிகர்கள். 1970களில் பிறந்தவர்களுக்கு ரஜினி, கமல் படங்கள் தான் மிகப் பெரும் என்டர்டெயின்மென்ட். 80களில், 90களில் ரஜினி, கமல் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
சமூக வலைதளங்கள் இல்லாத அந்தக் காலங்களில் வீட்டுத் திண்ணைகளில், தெருக்களில், பூங்காக்களில், கிரிக்கெட் மைதானங்களில் கூட ரஜினி, கமல் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். இத்தனை வருடங்களான பிறகும் அவர்களது சண்டை இன்னும் ஓயவில்லை. இந்த சமூக வலைதள காலத்திலும் அந்த 'பூமர் அங்கிள்'கள் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மலையாளப் படத்தில் 'குணா' படத்தின் 'ரெபரன்ஸ்' இருப்பதால் அந்தப் படம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி அரங்கு நிறைந்த காட்சிகளாக பல ஊர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'குணா' படம் பற்றியும், அப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பற்றியும், கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிலாகித்துப் பதிவிட்டு வருகிறார்கள்.
33 ஆண்டுகளுக்குப் பிறகும், படம் வெளிவந்த போது பிறக்காத, அல்லது குழந்தையாக இருந்த 'மஞ்சும்மல் பாய்ஸ்' குழுவினர் கமல் மீதும், 'குணா' மீதும் தங்களது அபிமானம் பற்றிப் பேசி வருகிறார்கள். அது ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளது. அதனால், அதே நாளில் வெளிவந்த 'தளபதி' படம் பற்றியும் ரஜினி ரசிகர்கள் பல விஷயங்களைக் குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள். இதனால், ரஜினி, கமல் ரசிகர்களிடையே 'தளபதி' சிறந்த படமா, 'குணா' சிறந்த படமா என இப்போது சண்டை நடந்து வருகிறது.