புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை தேடி வரும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதை வாடிக்காக வைத்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு சென்னை வந்து அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் திரும்பிச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு அதில் ஒரு ரசிகர் இறந்து விட்டார். இதன் காரணமாக தற்போது ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கடந்த முறை சென்னையில் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தி போட்டோசூட் நடத்தினேன். அப்போது திரும்பிச் செல்லும்போது ஒரு ரசிகர் விபத்தில் இறந்துவிட்டது எனக்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்தது. அதனால் இனிமேல் எனக்காக ரசிகர்கள் பயணம் செய்யக்கூடாது என்ற முடிவை எடுத்து உள்ளேன். நாளை(இன்று) முதல் ரசிகர்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கி இருக்கிறேன். அதன் முதல் கட்டமாக விழுப்புரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள செல்கிறேன் என்று அறிவித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.