'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.
அதில், “காலைல இருந்து உங்க வாழ்த்துகளையெல்லாம் பார்த்துட்டிருக்கேன். ரொம்ப நன்றி, பொறந்தநாளன்னைக்கு வேலை செய்ய கொடுத்து வச்சிருக்கணும். அதுக்கு உங்க அன்புதான் காரணம். போன வருஷம் இதே நாள், இதே நேரம் ஒரு கனவு புராஜக்ட்டை ஆரம்பிச்சோம். தற்செயலா என்னன்னு தெரியல. இந்த வருஷம் அதே நாள், அதே நேரத்துல அதே புராஜக்ட்டை முடிக்கிறோம். கூடிய சீக்கிரம் இதைப் பத்தின விஷயங்கள உங்ககிட்ட சொல்லிட்டே வரப்போறோம். எப்படி, ஆரம்பத்துல இன்டின்டன்ட்டா எப்படி பசங்கலாம் சேர்ந்து பண்ணமோ, அதே மாதிரி பசங்களோட சேர்ந்து ஒரு அளவுக்கு ஒரு பெரிய விஷயம் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன். நன்றி, தொடர்ந்து ஆதரவு கொடுங்க, உங்க எல்லாரோட அன்புக்கும் நன்றி,” எனப் பேசியுள்ளார்.
ஹிப்ஹாப் தமிழா நடித்து கடைசியாக கடந்த ஆண்டு 'வீரன்' படம் வெளிவந்தது. அதற்கடுத்து கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் 'பி.டி. சார்' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வந்து ஒரு வருடமாகிவிட்டது. அப்படத்தின் நிலை என்னவென்பது தெரியவில்லை.