பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இயக்குனர் தங்கர்பச்சான் அவரது மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமான ‛தக்கு முக்கு திக்கு தாளம்' படத்தை இயக்கினார். நகர்புறத்து காமெடி படமாக இது உருவானது. இந்த நிலையில் அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜித் பச்சான். இந்த படத்திற்கு 'பேரன்பும் பெருங்கோபமும்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
ரியோட்டா மீடியா தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான சிவபிரகாஷ் இயக்கி உள்ளார். விஜித் பச்சான் ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே.பி.தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது ''கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.