'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வந்துவிடும் நிலை உள்ளது. அதனால், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக இருந்தாலும் பத்து, பதினைந்து நாட்கள் ஓடுவதே மிகவும் சிரமமாக உள்ளதாக தியேட்டர்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருந்தாலும் சில படங்கள் சில தியேட்டர்களில் சில காட்சிகளாவது ஓடி 25வது நாளைக் கடக்கின்றன. அந்த விதத்தில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியான 'ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்' ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்துள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். அந்தப் படங்கள் சென்னை உள்ளிட்ட மாநகரங்ளில் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே தினத்தில் வெளியான 'தூக்குதுரை' படமும் 25 நாளைக் கடந்துள்ளதாக அப்படக்குழுவினரும் அறிவித்துள்ளார்கள். அவர்கள் நான்கு தியேட்டர்களில் ஓடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த 2024ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் 'அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன.