சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராதிகா ஆப்தே மும்பை விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ள சென்றபோது நடைபாதை மேம்பாலத்தில் என்ன ஏது என்று காரணம் சொல்லப்படாமலேயே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பல பயணிகளுடன் சேர்ந்து அடைத்து வைக்கப்பட்டதாக கூறி தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நடிகர் டிரம்ஸ் சிவமணிக்கும் சமீபத்தில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு காத்திருப்பு நிகழ்வு ஏற்பட்டது. ஆனால் அதை அவர் எதிர்கொண்ட விதம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி உள்ளது.
சமீபத்தில் கொச்சிக்கு விமானப்பயணம் மேற்கொண்ட டிரம்ஸ் சிவமணி விமான நிலையத்தில் இறங்கி கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை தனது லக்கேஜ்களை பெறுவதற்காக காத்திருந்தார். அவருடன் பயணித்த சக பயணிகள் பலரும் இதேபோல காத்திருந்து, ஒரு கட்டத்திற்கு மேல் டென்ஷன் ஆனார்கள். ஆனால் டிரம்ஸ் சிவமணி அவர்களை மட்டுமல்ல தன்னையும் கூட டென்ஷனை குறைத்து கூல் செய்யும் விதமாக எஸ்கலேட்டரின் அருகில் உள்ள கைப்பிடி சுவரில் குச்சிகளை வைத்து ஏ.ஆர் ரஹ்மானின் ஹம்மா ஹம்மா என்கிற பாடலுக்கு ஏற்றபடி இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.
அங்கிருந்த சக பயணி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “40 நிமிட காத்திருப்பு காரணமாக நாங்கள் எல்லோரும் போராட்டம் தான் நடத்தி இருக்க வேண்டும். மாறாக எங்கள் அனைவரையும் பொழுதுபோக்கும் மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார் சக பயணி ஒருவர்” என்றும் டிரம்ஸ் சிவமணி குறித்து கூறியுள்ளார்.




