தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
தமிழில் “டூ லெட், திரௌபதி, மண்டேலா, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ்” உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், 'கும்பலாங்கி நைட்ஸ்' மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அவர் திரைப்பட உதவி இயக்குனரான சோழன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர்.
இந்நிலையில் சற்று முன் சமூக வலைத்தளத்தில் ஷீலா அவரது கணவரை டேக் செய்து, “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும், அன்பும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த படங்களைத் தேர்வு செய்து அதில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியவர் ஷீலா. குறிப்பாக யோகி பாபு ஜோடியாக அவர் நடித்த 'மண்டேலா' படத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டவர்.
சமீபத்தில் வெளிவந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் எஸ்ஜே சூர்யாவின் காதலியாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
திருமண உறவு என்பது நடிகைகளைப் பொறுத்தவரையில் தற்காலிக உறவாகவே இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் ஷீலா.