மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. 540 கோடி வசூல் வரையில் படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் வசூல் கணக்கு என்னவென்பதை சொல்லவேயில்லை.
படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கம்தான். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நான்கு வாரங்கள் பிளஸ் நான்கு நாட்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.
படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், “இந்தியாவில் நவம்பர் 24ம் தேதியும், உலக அளவில் நவம்பர் 28ம் தேதியும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்,” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்களில் வெளியான போது பெற்ற வரவேற்பைப் போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.