பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மலையாளம் மற்றும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் ஜெயராம், தமிழில் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். தற்போது அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்துள்ள படம் 'அவள் பெயர் ரஜ்னி'. நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் நடித்துள்ளனர். நவரசா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் படத்தை இயக்கியுள்ளார். துப்பறியும் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு என்றால்... கதைப்படி தொடர் கொலைகள் நடக்கிறது. அதை செய்வது ஒரு பெண், அவள் பெயர் ரஜினி என்று கண்டுபிடிக்கிறார்கள். இதனால் அவள் நிச்சயம் ரஜினியின் தீவிரமான ரசிகையாக இருப்பாள் என்று கருதி ரஜினி படம் ஓடும் தியேட்டர்கள், ரஜினி போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கும் இடங்களில் அவளை தேடுகிறார்கள். உண்மையில் அவள் பெயர் ரஜினியா, அவள் ஏன் கொலை செய்கிறாள், அவள் ஆவியா, மனுஷியா என்பதற்கான விடையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது.