'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

'7ம் அறிவு' படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்தவர் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா, களம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த நிலையில் சில வருட இடைவெளிக்கு பிறகு 'தி வில்லேஜ்' என்ற வெப் தொடர் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். இதில் அவர் அதிரடிப்படை வீரராக நடித்துள்ளார்.
இந்த தொடரில் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதையை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
தொடரில் நடித்திருப்பது பற்றி பூஜா ராமச்சந்திரன் கூறும்போது, “தமிழில் நீண்ட காலம் கழித்து, நான் திரும்ப வந்திருக்கிறேன், மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எப்படி மிலிந்த் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி வேடம் செய்ய வேண்டும் என்பது கனவு, எனக்கு இந்த கதாபாத்திரம் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் கர்ப்பமாகும் முன் இந்த வாய்ப்பு வந்தது. நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடித்தேன் மூன்று மாதத்தில் எனது போர்ஷனை எடுத்து விடுங்கள் என்று டைரக்டரிடம் கேட்டேன். பொதுவாக நைட் ஷூட் எடுப்பது கஷ்டம். இது அதை விட கஷ்டம். ஆனால் மிலிந்த் செம்ம கூலாக ஹேண்டில் செய்தார். இந்த சீரிஸில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. எல்லோரும் கஷ்டப்பட்டுள்ளார்கள் சீரிஸ் மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.




