‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
எந்த கட்சி புதிதாக ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியை குளிரவைக்கும் முகமாக பாராட்டு விழா நடத்துவது தமிழ் திரையுலகின் வழக்கம். அந்த வகையில் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'பாசத் தலைவருக்கு பாராட்டு விழா' என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்தினார்கள். ஜெயலலிதாவுக்கும் பிரமாண்ட விழா நடத்தினார்கள். அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வரும், இந்தாள் முதல்வரின் தந்தையுமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
இந்த விழாவை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னின்று நடத்துகிறது. பெப்சி அமைப்பில் உள்ள 24 சங்கங்களும் தங்களது பங்களிப்பை செய்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று விழா குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். முறைப்படியான அழைப்பும் விடுத்தனர். இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.