படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி, ஈஸ்வரி ராவ், சூப்பர் சுப்பராயன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இந்த கருப்பர் நகரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‛உலகம் முழுக்க ஒரே சண்டை தான். 100 பேர் பாடுபட்டதை ஒருத்தன் தின்கிறதா? இல்ல 100 பேர் பாடுபட்டு 100 பேர் பங்கு போட்டுகிறதா? என்பதுதான் சண்டையே. உடம்புல ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும். உன் உடம்பில் ரத்தம் சூடா இருக்கு. நீ தான் சண்டை செய்யணும்' போன்ற டயலாக் உடன் முடியும் இந்த டீசர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.