சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ஒரு படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலைக் கொடுத்தால் அந்தப் படங்களின் இயக்குனர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் அல்லது கதாநாயகன் பரிசுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
'ஜெயிலர்' ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளர் விலையுயர்ந்த காரை அவர்களுக்குப் பரிசாக வழங்கினார்.
'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றிக்காக அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் பிஎம்டபிள்யு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
500 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகச் சொல்லப்படும் 'லியோ' படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் என்ன கார் பரிசாக வழங்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை நடக்க உள்ள வெற்றி விழாவில் இது குறித்து அவர் அறிவிக்கலாம்.
'மாஸ்டர்' பட வெற்றிக்கே விஜய்க்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்க தயாரிப்பாளர் முன் வந்ததை, விஜய் வேண்டாமென மறுத்ததாக அவர் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். 'லியோ' படத்திற்கும் அதையே சொல்லி மறுத்துவிடுவார் விஜய்.
'பீஸ்ட்' பட வெற்றிக்கு படக்குழுவினரை அழைத்து விருந்து வைத்தார் விஜய். ஆனால், 'லியோ' குழுவினருக்கு இன்னும் அப்படி ஒரு விருந்தை வைக்கவில்லை. இதெல்லாம் நாளைய வெற்றிவிழாவுக்குப் பிறகாவது நடக்குமா ?.
முன்னதாக விக்ரம் படம் வெற்றி பெற்றபோது இயக்குனர் லோகேஷிற்கு விலை உயர்ந்த காரை பரிசளித்தார் நடிகர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.




