அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே தமிழகத்தில் ஆரம்பமாக வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதனால், இங்கு அதிகாலை காட்சிகள் நடைபெற முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் நடக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் முதல் நாள் காட்சிகள் ஆரம்பமாகின்றன.
எனவே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையோரம் இருக்கும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் 'லியோ' படத்தை சீக்கிரமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களாம். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு அவற்றைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.