ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி ரோஜாவை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக விமர்சித்தார். இதுகுறித்து ஆந்திர மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் பண்டாரு சத்யநாராயணா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ரோஜா திருப்பதியில் கண்ணீர்மல்க பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் ரோஜாவுக்கு ஆதரவாக நடிகை ராதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது : ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். கடந்த இரண்டு நாட்களாக ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது. அண்மையில்தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பெண்கள் கல்வியில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஒரு பங்காக உள்ளனர். சமூகத்தின் ஒற்றுமையில் பெண்களும் ஒரு தூணாக உள்ளனர். இந்த நிலையில் பெண் குறித்த அவதூறான அரசியல் கருத்து அசிங்கமாக உள்ளது. இந்தியாவில் பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நிலையில் இதுபோன்ற அவதூறான விமர்சனங்கள் அசிங்கமாக உள்ளது.
ஒரு அமைச்சரை புளூ பிலிமில் நடித்தவர் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. ஒரு மனிதராக, ஒரு குடும்பத்தின் தலைவனாக, ஒரு அரசியல்வாதியாக தனது தவறுக்கு அந்த அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசி உள்ளார்.