திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஜோக்கர், குக்கூ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ராஜூ முருகன். இவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஜப்பான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் அடுத்தபடியாக எஸ்பி சினிமாஸ் என்று நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார் ராஜூ முருகன். இந்த படத்தை எழில் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். சான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் சில தினங்களில் வெளியாக இருப்பதாக ராஜூ முருகன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுகிறார். அதோடு, எஸ்பி சினிமாஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு நல்ல திரைப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.