அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு நடுத்தர இளைஞனின் காதலை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. அப்போது தெலுங்கு பதிப்பில் '7ஜி பிருந்தாவன் காலனி' எனும் பெயரில் வெளிவந்தது. இதில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் அதிகம் கேட்கப்படும் பாடலாக அமைந்துள்ளது.
அந்த காலகட்டத்தில் தமிழில் இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு பதிப்பில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து ' 7ஜி பிருந்தாவன் காலனி' தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதியில் இப்படத்தை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். இப்போது இந்த படம் முதல் நாள் உலகளவில் ரூ. 1.04 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ளனர். எந்த ஒரு முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமல் ரீ ரிலீஸில் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றதை சினிமா வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.