சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள் | டிசம்பர் மாதத்தில் புறநானூறு பட படப்பிடிப்பு? | சுந்தர்.சி இயக்கத்தில் ரவி தேஜா? | தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு | 'விவாரியம்' ஹாலிவுட் படத்தின் ரீமேக் 'பிளாக்' ? | இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஓடிடியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் நாற்காலியின் 4வது கால் | லிப்லாக் முத்த காட்சியில் நடிக்க ஒளிப்பதிவாளர் தான் காரணம் : இனியா | பிளாஷ்பேக் : நடிகராக தோற்று இயக்குனராக ஜெயித்த பி.ஆர்.பந்துலு | விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை : தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. இப்படத்தை பான் இந்தியா படமாக அக்டோபர் 19ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்கான அனைத்து வியாபாரமும் ஏறக்குறைய முடிந்துவிட்டது.
தமிழகத்தில் அக்டோபர் 19ம் தேதியன்று வேறு படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் தயங்குவார்கள். 'லியோ' படத்திற்குப் போட்டியாக படங்களை வெளியிட தியேட்டர்களும் கிடைக்காது. ஆனால், தெலுங்கில் 'லியோ' படத்தை வெளியிட புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அங்கு அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் “பகவந்த் கேசரி, டைகர் நாகேஸ்வர ராவ்,” ஆகிய நேரடி தெலுங்கு படங்களும் 'கோஸ்ட், எஸ்எஸ்இ சைட் பி' கன்னடப் படங்களும், “தேஜஸ், யாரியான் 2, கணபத்' ஹிந்திப் படங்களும், வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
'பகவந்த் கேசரி' படத்தில் பாலகிருஷ்ணாவும், 'டைகர் நாகேஸ்வர ராவ்' படத்தில் ரவி தேஜாவும் நடித்துள்ளனர். அவர்கள் தங்களது படங்களுக்கு அதிக தியேட்டர்களைக் கிடைக்க பெரும் முயற்சி எடுப்பார்கள். நேரடித் தெலுங்குப் படங்கள் என்பதால் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற குரலும் தெலுங்குத் திரையுலகத்தில் எழும்.
எனவே, 'லியோ' படத்திற்கு தெலுங்கில் தேவையான அளவு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.