'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரித்து வர்மா, செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதில் சில்க் சிமிதா நடித்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 80,90 ரசிகர்களை தாண்டி இன்று சமூக வலைதளங்களிலும் சில்க் சிமிதா கொண்டாடும் கூட்டம் உள்ளது. அதான் சில்க் சிமிதா வருவது போலே காட்சிகள் எப்படி உருவாக்கினர்கள் என நெட்டிசன்களுக்கு சந்தேகம் எழுந்தது. இன்ஸ்டாகிராம் மாடல் நடிகை விஷ்ணு ப்ரியா காந்தி என்பவருக்கு சில்க் சிமிதா மாதிரியான முக அமைப்பு உள்ளது. அவரை தான் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர். மேலும், சற்று மெருகேற்றுவதற்காக கிராபிக்ஸ் பணிகளும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.