நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
சென்னை : காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்எஸ் சிவாஜி(67) சென்னையில் இன்று(செப்., 2) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக கூறப்படுகிறது.
பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடிகராக ஆர்எஸ் சிவாஜி அறிமுகமானார். பின்னர் கமலின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரானார். கமலின் விக்ரம் தொடங்கி அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராசன், குணா, மகளிர் மட்டும், ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன்'' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜ் உடன் சக போலீஸாக நடித்தவர், அந்த படத்தில் அடிக்கடி ‛‛தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க...'' என ஜனகராஜை புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த வசனம் இன்று வரை இவரை பேச வைத்தது.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சாய்பல்லவியின் கார்கி போன்ற இன்றைய காலத்து படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 100க்கணக்கான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நேற்று வெளியான யோகிபாபுவின் லக்கி மேன் படத்திலும் நடித்தார்.
சிவாஜி பெயர் காரணம்
சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஆர்எஸ் சிவாஜி. பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானம் இவரது தந்தை ஆவார். "பாசமலர்", "பாலாடை", "அன்னை இல்லம்" போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் சந்தானம். சிவாஜியின் மீது கொண்ட அன்பினாலே தன் மகனுக்கு சிவாஜி என பெயரிட்டார். நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதியின் உடன்பிறந்த சகோதரர் ஆர்எஸ் சிவாஜி ஆவார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை உளவியல் பட்டப் படிப்பில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றவர். ஒரு நடிகனாக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளராக, உதவி இயக்குநராக திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்தவர் நடிகர் ஆர்எஸ் சிவாஜி.
சென்னை வளசரவாக்கத்தில் ஆர்எஸ் சிவாஜியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.