ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

'முன்னா மைக்கேல்' என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானர் நிதி அகர்வால். அதன்பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர், சிம்பு நடிப்பில் 'ஈஸ்வரன் ' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். ஜெயம் ரவி ஜோடியாக 'பூமி' படத்தில் நடித்தார். இரண்டு படமும் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு வாய்ப்பு இன்றி இருந்த நிதி அகர்வால் கடந்த ஆண்டு 'கலகத்தலைவன்' படத்தில் நடித்தார். தற்போது பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரி ஹர வீரமல்லு' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்க இருக்கிறார். கடந்த ஒரு வருடமாகவே இந்த தகவல் ஓடிக்கொண்டிருந்தாலும் இப்போது அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னணி தெலுங்கு இயக்குனரான மாருதி தற்போது 'ராஜா டீலக்ஸ்' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இவர் ஏற்கெனவே பாபு பங்காரம், 3 ரோசஸ், பக்கா கமரிக்கல், பிராண்ட் பாபு, லவ்வர்ஸ், கிரீன் சிக்னல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
தற்போது அவர் இயக்கும் ராஜா டீலக்ஸ் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடிய நிதி அகர்வாலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு "உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். விரைவில் உங்களை படப்பிடிப்பில் சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ராஜா டீலக்ஸ் படத்தில் நிதி அகர்வால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.