தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் |
ரசிகர்களைக் கவரும் சினிமா பாடல்கள், யூ டியூபில் 100 மில்லியன் பாடலைக் கடக்கும் பாடல்கள்களாக அமைகின்றன. அந்த விதத்தில் அதிக 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் என்ற பெருமையை அனிருத் பெற்றுள்ளார்.
கடந்த வாரம் அவரது இசையில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல் அவரது 19வது 100 மில்லியன் பாடலாக இடம் பெற்றது. அடுத்து 20வது பாடலாக 'லியோ' படத்தின் 'நான் ரெடிதான்' பாடல் இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் அனிருத்தின் இரண்டு பாடல்கள் இந்த 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.
தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக 100 மில்லியன் பாடல்களைப் பெற்ற சாதனையை விஜய் ஏற்கெனவே தன் வசம் வைத்துள்ளார். 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து', 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்', ''வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே', 'மெர்சல்' படத்தின் 'ஆளப் போறான் தமிழன்', 'பிகில்' படத்தின் 'வெறித்தனம்', 'தெறி' படத்தின் 'என் ஜீவன்', 'கத்தி' படத்தின் 'செல்பி புள்ள', 'தெறி' படத்தின் 'ஈனா மீனா டீக்கா', 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி', 'பிகில்' படத்தின் 'சிங்கப் பெண்ணே', ஆகிய 10 பாடல்கள் ஏற்கெனவே விஜய்யின் 100 மில்லியன் கிளப்பில் உள்ளன. இப்போது 11வது பாடலாக 'லியோ' படத்தின் 'நான் ரெடிதான்' பாடலும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.