'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் ‛குஷி'. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை நிகழ்வு ஐதராபாத்தில் நடந்தது. அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, ‛‛குஷி படத்திற்காக சமந்தா மிகவும் கஷ்டப்பட்டார். ஏப்ரலில் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜூலை மாதம் சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து சமந்தா முதலில் கூறவில்லை. பின்னர் அவரே வெளிப்படையாக பேசினார்.
மயோசிடிஸ் நோய் பாதிப்பால் ஒருக்கட்டத்தில் எங்களிடம் கூட அவரால் பேச முடியவில்லை. எங்களை பார்க்கவும் விடவில்லை. கடும் வேதனையை அவர் அனுபவித்துள்ளார். இன்னும் அவர் முழுமையாக குணமாகவில்லை. இங்குள்ள லைட் வெளிச்சத்தால் அவருக்கு பாதிப்பு ஏற்படும். இருப்பினும் அதையெல்லாம் கடந்து சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் உங்களின் அன்பு மட்டுமே. இதே சிரித்த முகத்தை செப்., 1 அன்றும் காண விரும்புகிறேன்'' என்றார்.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டில் கவர்ச்சி உடையில் வலம் வந்த சமந்தா விழா மேடையில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி பாடலுக்கு ரசிகர்கள் முன்னிலையில் நடனம் ஆடினர். சமந்தாவை பாடல் நடனத்தின்போது விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி சுற்றினார். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வைரலானது.
காதல் கலந்த குடும்ப படமாக உருவாகி உள்ள ‛குஷி' படம் செப்., 1ம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது.