எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
க்ரேடா கெர்விக் இயக்கத்தில், மார்காட் ராபி, ரியான் காஸ்லிங், அமெரிக்கா பெரைரா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜுலை 21ம் தேதி வெளிவந்த படம் 'பார்பி'. சுமார் 150 மில்லியன் யுஎஸ் டாலர் தயாரிப்பில் உருவான இப்படம் 1000 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் வசூலை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது 920 மில்லியன் யுஎஸ் டாலரை நெருங்கியுள்ள இந்த வசூல் நாளைக்குள் 1000 மில்லியனைக் கடந்துவிடும் என்கிறார்கள். ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் இப்படி ஒரு வசூல் சாதனையைப் புரிவது இதுவே முதல் முறை.
ஹாலிவுட்டில் இதுவரை வெளியான படங்களில் சுமார் 50 படங்கள் 1000 மில்லியன் வசூலைக் கடந்துள்ளன. 2009ல் வெளிவந்த 'அவதார்' படம் 2923 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. 2019ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' 2797 மில்லியன், கடந்த வருடம் வெளிவந்த 'அவதார் த வே ஆப் வாட்டர்' படம் 2320 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக விக்கிபீடியா தகவல் தெரிவிக்கிறது.
இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் 'த சூப்பர் மரியோ பிரோஸ்' திரைப்படம் 1356 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்றது. ஒரே ஆண்டில் 1000 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெறும் இரண்டாவது படமாக 'பார்பி' அமையப் போகிறது. 1000 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 8268 கோடி ரூபாய்.