‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 |
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளிவந்த திரைப்படம் வீரன். இந்த படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அவர் இயக்குனராக அறிமுகமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில் வீரன் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஏஆர்கே சரவன். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிற்பகுதியில் தொடங்கும் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.