ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சினிமா பிரபலங்கள் அணியும் உடைகள் மட்டுமின்றி அவர்களின் ஹேர்-ஸ்டைல், தாடி, மீசை போன்றவையும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகும். அந்தவகையில் 2017ல் கன்னடத்தில் சுதீப், அமலாபால் நடித்து வெளியான படம் ‛ஹெப்புலி'. இதில் சுதீப் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் வலம் வந்தார். இந்தபடம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆன பின்பு கூட இப்போது அவரின் ஹேர்ஸ்டைலை பலர் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம், குளஹெள்ளியில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் சிவாஜி நாயக் என்பவர் அந்த பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‛‛தயவு செய்து மாணவர்களுக்கு ‛ஹெப்புலி' படத்தில் வரும் சுதீப் ஸ்டைலில் முடி திருத்தம் செய்ய வேண்டாம். இதனால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த மறுக்கின்றனர்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்ற சலூன் கடை உரிமையாளர், மாணவர்களுக்கு இனி அவ்வாறு முடிவெட்ட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியரின் இந்த வேண்டுகோள் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.