2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது அப்பட நாயகனான கவுதம் கார்த்திக் உடன் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார் மஞ்சிமா. திருமணத்திற்கு பிறகு வெளியான அவரது போட்டோக்களில் வெயிட் போட்டிருந்த மஞ்சிமா தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறார். அதோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தலை கீழாக நின்றபடி ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து திருமணத்திற்கு பிறகு ஆர்யாவின் மனைவி சாயிஷா நடிக்க வந்தது போன்று அடுத்து கௌதம் கார்த்திக்கின் மனைவியான மஞ்சிமா மோகனும் நடிப்பதற்கு தன்னை தயார் படுத்தி வருகிறாரோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.