'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
'பத்து தல' படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் அவரது 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்க உள்ளார். இப்படம் ஒரு சரித்திரப் படமாக உருவாக உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. அந்தப் படத்திற்காக சிம்பு தற்போது தயாராகி வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு கலந்து கொண்ட போது அவரது நீளமான ஹேர்ஸ்டைல் அதை உறுதி செய்துள்ளது.
தோற்றத்தை மாற்றி நடிக்கும் நடிகர்களில் சிம்புவும் முக்கியமானவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'பத்து தல' படத்தில் கூட வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். சிம்புவின் 48வது படம் பற்றிய அடுத்த அப்டேட்டுகள் எதுவும் வராத நிலையில் சிம்புவின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.