கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
கடந்த 2019ம் ஆண்டில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ‛ஜ ஸ்மார்ட் ஷங்கர்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளனர். இதற்கு ‛டபுள் ஜ ஸ்மார்ட்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற ஜூலை 12ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது .
இந்த நிலையில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் இரண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர் . அதன்படி, பாலிவுட் முன்னணி நடிகை ஸ்ரத்தா கபூர் மற்றும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி இருவரும் இந்த படத்தில் ராம் பொத்தினெனிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர்.
பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இந்த படம் அடுத்தாண்டு மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது. ராம் பொத்தினேனி தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ‛தி வாரியர்' படத்தில் நடித்தார். ஆனால் இந்தபடம் வரவேற்பை பெறவில்லை.