‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை 14) படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு கார்ட்டூன் வரையும் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இதன் டிரைலரில் சிவகார்த்திகேயனுக்கு அடிக்கடி வானத்தை பார்த்து பயப்படுவது மாதிரியான காட்சிகள் அமைந்தன. ஏதோ ஒரு குரல் கேட்பதாக அந்த சர்ப்ரைஸ் அமைந்து இருந்தது. இந்நிலையில் இந்த சர்ப்ரைஸை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழுவினர் காலையில் அறிவித்தனர். அதன்படி அந்த சர்ப்ரைஸ் விலகி உள்ளது. இதுதொடர்பாக ஒரு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயனுக்கு வானில் இருந்து ‛‛வீரமே ஜெயம்'' என்ற குரல் ஒலிக்கிறது. இதற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இந்த அறிவிப்பை தான் படக்குழுவினர் இப்போது வெளியிட்டுள்ளனர்.




